Editorial / 2018 நவம்பர் 02 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் வீழ்ந்து, மூழ்கிய விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளில் ஒரு பெட்டியை மீட்டுள்ளதாக, அந்நாட்டு மீட்புப் பணியாளர்கள் நேற்று (01) தெரிவித்தனர்.
விமானத்தில், விமானப் பறப்புத் தரவுகளைப் பதிவுசெய்வதற்கு ஒரு கருவியும், விமானிகளின் அறைகளில் ஒலிகளைப் பதிவுசெய்வதற்கு இன்னொரு கருவியும் உள்ளன. இவ்விரண்டுமே பொதுவில், கறுப்புப் பெட்டிகள் என அழைக்கப்படுகின்றன. இப்போது மீட்கப்பட்டது, எந்தப் பதிவுகளைக் கொண்டுள்ளது என்பது, இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
ஆனால், இரண்டில் எதுவாக இருந்தாலும், விமானத்துக்கு என்ன நடந்தது என்பதை அறிவதில், இப்பெட்டி மிகுந்த துணையாக இருக்குமென நம்பப்படுகிறது.
27 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
50 minute ago
1 hours ago