Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ காரணமாகக் காணாமற்போனோரின் எண்ணிக்கை, 1,276ஆக உயர்வடைந்துள்ளது என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையும், 76ஆக உயர்ந்துள்ள நிலையிலேயே, இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலைகள் சூழ்ந்த நகரமான பரடைஸில், தீக்குள் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கானோரை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர் என்ற செய்தி வெளியான பின்னணியிலேயே, இந்தத் தகவலும் வெளியாகியுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான பட்டியலில் காணப்பட்ட சுமார் 380 பேர், கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் அடையாளங்காணப்பட்டு, பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர் எனத் தெரிவித்த, அப்பகுதிக்கான ஷெரீப் கொரி ஹோனியோ, அதன் பின்னரும் பட்டியலில் உள்ளடங்கியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் விஜயம் மேற்கொண்டு, அப்பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.
42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
1 hours ago