Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான கஸ்னியின் மீதான தலிபானின் தாக்குதலொன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், அரசாங்க அதிகாரிகளின் தகவல்படி பொதுமக்கள், பாதுபாப்புப் படைகள், தலிபான் ஆயுததாரிகள் உள்ளடங்கலாக இறந்தோரின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது.
20க்கும் 30க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான பொதுமக்களும் 100 அளவிலான பாதுபாப்புப் படைகளும் மோதலில் கொல்லப்பட்டதாக பாதுகாப்பமைச்சர் தாரிக் ஷா பஹ்ராமி நேற்றுத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றும்போது, 12 முக்கிய தளபதிகள் உட்பட 194 தலிபான் ஆயுததாரிகளும் பிரதானமாக ஐக்கிய அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தாரிக் ஷா பஹ்ராமி மேலும் தெரிவித்துள்ளார்.
காபூலிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகத்தின் தரவுப்படி கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமை ஆகக்குறைந்தது ஒன்பது விமானத் தாக்குதல்களை ஐக்கிய அமெரிக்க விமானங்கள் நடாத்தியுள்ளன.
காபூலையும் தென் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் மூலோபாய இடமானதும் கஸ்னி மாகாணத்தின் தலைநகரான கஸ்னி நகரத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை தலிபான் நுழைந்ததையடுத்து தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
கஸ்னி நகரத்திலிருந்து தகவல் வெளிவருவது குறைவாகவுள்ளதுடன், மோதல்களில் பெரும்பாலான தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அழிவடைந்ததுடன், உள்ளூர் செய்திச் சேவைகள் ஒளிபரப்பை நிறுத்தியுள்ள நிலையில் தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
கஸ்னி நகரத்துக்குள் செல்லும், வெளியேறும் வீதிகள் சேதமடைந்துள்ளதுடன், வழங்கல்கள் வருவது தலிபான் படைகளால் தடுக்கப்பட்டுள்ளபோதும் மோதலிலிருந்து கால்நடையாக தப்பியவர்கள் வீதியில் சடலங்களையும் கட்டடங்கள் எரிவதையும் கண்ணுற்றுள்ளனர்.
46 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
4 hours ago