Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெற்றப் பின்னர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், எற்கெனவே, நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்வரும் 7ஆம் திகதி முதல், தொடர்ச்சியாக 13 நாள்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி, காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் புதிய தலைவராக பிரியங்கா காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி தேர்தெடுக்கப்பட்டிருந்தபோதும், அவர் தலைவராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற 17ஆவது wநாடாளுமன்றத்துக்கான கீழ்ச்சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைடைந்தது.
இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல் காந்தி பதவி விலகுவதாகவும் மேலும் காந்தி அல்லாத ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்தத் தலைவரைத் தேர்தெடுக்க, அக் கட்சியின் மூத்த தலைவர்கள் பல்வேறு மாநிலத் தலைவர்கள், முதலமைச்சர்கள், கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழுவின் உறுப்பினர்கள் சீல் வைக்கப்பட்ட உறைகளில் வாக்களித்தனர்.
அந்த உறைகளில் மல்லிகார்ஜூன் கார்கே, சுஷில் குமார் ஷிண்டே, திக்விஜய் சிங், குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா ஆகிய ஏழு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில், தற்போது, புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு உருவாகியுள்ளது.
இதற்காக, அக்கட்சியின் தேசிய செயற்குழு, அடுத்த வாரம் டெல்லியில் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago