Freelancer / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், வீடுகளையும் உறவுகளையும் இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதும், இஸலரேல் தாக்குதல் நடத்துகிறது .
இந்நிலையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நிவாரண பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் பாராளுமன்றம் பிரேரணை ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு [UNRWA], இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலும் செயல்படத் தடை விதிக்கும் பிரேரணைக்கு, திங்கட்கிழமை (28), இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த பிரேரணை நடைப்முறைபடுத்தப்பட்ட பின்னர் காசாவுக்குள் செல்லும் சொற்ப நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் சூழல் உருவாகும் என்று ஐநா கவலை தெரியவிட்டுள்ளது.
இந்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பாராளுமன்றம் இதற்கு ஒப்புதல் வழங்கியது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. லெபனான்- இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் நீலக் கோட்டில் அமைத்துள்ள ஐநா அமைதிப்படை தலைமையகம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago