2025 மே 16, வெள்ளிக்கிழமை

காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தடை

Freelancer   / 2023 ஜூன் 12 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நெதர்லாந்து வீரேநகரில் புகழ்பெற்ற காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் கடற்கரைக்கு  தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகளும் இங்கு வருவார்கள்.


காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்துகொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது உண்டு.  சில காதலர்கள் மெய்மறந்து அத்துமீறுவதும் உண்டு. பக்கத்தில்யார்? இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் நிர்வாணமாக உல்லாசத்திலும் ஈடுபடுவார்கள்.


கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறுகுன்றுகளை கூட காதலர்கள் விடுவது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம்சுழிக்கின்றனர்.


கடற்கரையை  படுக்கை அறையாக மாற்றும் இந்த அத்துமீறல் குறித்து வீரேநகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. 


இதையடுத்து வீரேநகர் கடற்கரையில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடைவிதித்துள்ளது. 

கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .