Editorial / 2022 ஜனவரி 21 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கானாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு சுரங்க நகருக்கு அருகில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கானாவில் பொகோசோ நகருக்கு அருகில் சுரங்க வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த சம்பவத்தில் 60 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் கோஜோ ஓப்போங் நக்ருமா தெரிவித்தார்.
500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் நாயகம் செஜி சாஜி அமெடோனு தெரிவித்துள்ளார்.
கானாவின் ஜனாதிபதி நானா அகுஃபோ-அடோ டுவிட்டர் பக்கத்தில் “நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவம் அவசரகால முயற்சிகளில் இணைந்துள்ளதாகவும், நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குடியிருப்பாளர்களுக்கு விரைவான நிவாரண பணியை மேற்கொண்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
2 minute ago
13 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
23 minute ago
30 minute ago