Editorial / 2018 நவம்பர் 22 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேற்று முன்தினம் (20) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 72 பேர் காயமடைந்தனர் என, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட, மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது அமைந்தது.
முஸ்லிம்களின் இறைதூதுவரான நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் சமய நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, இத்தாக்குதல் நடத்தப்பட்டது. திருமண மண்டபமொன்றில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த போதே, சமய அறிஞர்களையும் சமயத் தலைவர்களையும் இலக்குவைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என, ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சின் பேச்சாளர் வாஹிட் மஜ்ரோ தெரிவித்தார்.
இத்தாக்குதல்களை யார் நடத்தினார்கள் என்பது, இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், அண்மைக்காலத்தில் காபூலில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவே உரிமை கோரியிருந்தது.
அத்தோடு, இத்தாக்குதலைக் கண்டிப்பதாக, தலிபான் ஆயுததாரிகள், வட்ஸ்அப் மூலமாகத் தெரிவித்தனர்.
இந்த அனர்த்த்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில், நேற்றைய தினம், தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அத்தோடு இத்தாக்குதலைக் கண்டித்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, “மன்னிக்கமுடியாத குற்றம்” என வர்ணித்தார்.
12 minute ago
22 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
55 minute ago