Editorial / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னை, தான் விரும்புகிறார் என்பதையும், அவரது விருப்பங்களை நிறைவேற்றவுள்ளார் என்பதையும் அவரிடம் கூறிவிடும்படி, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தாரென, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜனாதிபதி மூனும், ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற ஜி20 மாநாட்டில் வைத்துச் சந்தித்திருந்தனர். இதன்போதே, இக்கோரிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்தாரென, ஜனாதிபதி மூன் தெரிவித்தார்.
வடகொரியத் தலைவர் கிம், மிக விரைவில் தென்கொரியாவுக்குச் சென்று, தென்கொரிய ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார். இதை முன்னிட்டே, குறித்த செய்தியைப் பகிருமாறு, ஜனாதிபதி ட்ரம்ப் கோரியுள்ளார்.
வடகொரியத் தலைவரும் ஜனாதிபதி ட்ரம்ப்பும், இவ்வாண்டு ஜூனில், சிங்கப்பூரில் வைத்துச் சந்தித்திருந்தனர். இருவருக்குமிடையிலான அடுத்த சந்திப்பு, அடுத்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வடகொரியத் தலைவரை விரும்புவதாகவும், அவரின் “விருப்பங்களை” நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தமை, உள்நாட்டில் அவருக்கான எதிர்ப்புகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகார ஆட்சியாளர்கள் மீதான தனது விருப்பை அடிக்கடி வெளிப்படுத்தும் வழக்கத்தைக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன், வடகொரியத் தலைவர் கிம் ஆகியோரை, ஏற்கெனவே புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
40 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
55 minute ago
2 hours ago