Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 27 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
விண்வெளியில் இருந்து புவியின் பல்வேறு சாதக பாதகங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது தான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம். அந்த ஆய்வு மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மாதக் கணக்கில் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் போன்றவற்றை பெருவதில் பெரும் சவாலை சந்திக்கிறார்கள். அதற்கு தீர்வுகாண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதில் ஒன்று விண்வெளி வீரர்கள் வெளியேற்றம் கழிவுகளில் இருந்து தண்ணீரை மறு சுழற்சி செய்யும் முயற்சி.
இதில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்த முயற்சியை தீவிரப்படுத்தினால் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான தண்ணீரை உடல் கழிவை சுத்திகரிப்பு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவை சுற்றுச் சூழல் கட்டுப்பாடு மற்றும் லைஃப் சப்போர்ட் சிஸ்டம்(ECLSS) முறைப்படி பெறப்பட்டு வருகிறது. இந்த முறைப்படி உணவுப் பொருள் காற்று மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது. தற்போது UPA( Urine Processor Assembly) முறைப்படி பயன்படுத்தப்படாத கழிவுகளையும் சுத்திகரிப்பு செய்யும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவற்றை மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த முயற்சியில் குறிப்பிடதகுந்த முன்னேற்றமும் அடைந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago