Editorial / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய அரசியல்வாதிகளுக்கும் சி.என்.என் ஊடகத்துக்கும், குழாய்க் குண்டுகள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அனுப்பப்பட்டமை தொடர்பில், கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஐ.அமெரிக்காவின் அரசியல் சூழல், மிகவும் துருவப்பட்டதாக மாறியிருக்கும் நிலையில், இரண்டு கட்சியினரும், கடுமையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், நாட்டில் ஜனாதிபதி என்ற அடிப்படையில், ஜனாதிபதி ட்ரம்ப், நாட்டை மேலும் பிளவுபடுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக, நாட்டின் பிரதான ஊடகங்கள் மீது, தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்துவரும் அவர், ஊடகங்களை, “மக்களின் எதிரிகள்”, “போலிச் செய்தி” என, தொடர்ச்சியான விமர்சித்து வருகிறார். இந்த விமர்சனங்களின் முக்கியமான ஒன்றாக, சி.என்.என் மீதான விமர்சனம் அமைந்துள்ளது. சி.என்.என் ஊடகத்தை, “போலிச் செய்தி” என்று, அவர் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். எனவே, சி.என்.என் ஊடகத்துக்குக் குண்டு அனுப்பப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், நடைபெறவுள்ள மத்தியகாலத் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தப் பாடுபடும் ஜனாதிபதி ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியினரை, கடுமையாக விமர்சித்து வருவதோடு, அவர்கள், நாட்டுப்பற்று அற்றவர்கள் என்ற ரீதியிலும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். பராக் ஒபாமாவும் ஹிலாரி கிளின்டனும் சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள் என்று கூறுவது; எரிக் ஹோல்டர், ஜோன் பிரென்னன் போன்ற முக்கிய அதிகாரிகளையும் சிறைக்கு அனுப்ப வேண்டுமெனக் கூறுவது என, ஜனாதிபதியின் விமர்சனங்கள் தொடர்கின்றன.
எனவே தான், குண்டுகள் அனுப்பப்படும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தியவர் ஜனாதிபதியே என, ஜனநாயகக் கட்சியினரும் ஊடக உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago