Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 27 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
5 இலக்கத்தில் அல்லது லட்சத்திற்கு மேல் சம்பளம் எந்தெந்த வேலைக்கு கிடைக்கும் என்ற கேள்வியை கேட்டால் நாம் சட்டென்று முதலில் ஐடி துறையைத் தான் குறிப்பிடுவோம். அதுபோக மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என வெகுசிலர் மட்டுமே இந்த வரிசையில் இணைவார்கள்.
இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தோம் என்றால் கூலி வேலை என்றாலும், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் அவர்களது ஊதியம் இலட்சத்தை தாண்டி இருக்கலாம். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இலட்சத்திற்கு மேல் ஊதியம் என்பது மாதத்திற்கு தான். ஆனால், தினசரி லட்சத்திற்கு மேல் சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிலும் குதிரைக்கு முடி வெட்டி விடும் நபருக்கு இவ்வளவு பெரிய சம்பாத்தியம் கிடைக்கும் என்றால் நிச்சயமாக நீங்கள் ஆச்சரியம் அடையக் கூடும்.
ஆனால், எல்லோராலும் இதை அவ்வளவு சுலபமாக செய்துவிட முடியாது. ஐக்கிய அரபு அமீரக நாடுகள், சவுதி அரேபியா, கட்டார், ஈரான், குவைத் ஆகிய நாடுகளில் நாடுகளில் குதிரைகளுக்கு முடி வெட்டும் பணியாளர்கள் கிடைப்பது மிக அரிது. அதனால் அதற்கான ஊதியமும் அதிகம். ஒரு குதிரைக்கு முடி வெட்டினால் சுமார் 150 டொலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறதாம். ஒரு குதிரைக்கு முடி வெட்டுவதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். சராசரியாக நாளொன்றுக்கு 10 குதிரைகளுக்கு முடி வெட்டிவிடும் பட்சத்தில் 1.20 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
4 hours ago
6 hours ago