Freelancer / 2024 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க நாடான காங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், பாகிஸ்தானிலும் பரவியுள்ளது.
'எம் பொக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று, உலகளாவிய சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. 1970களில் ஆபிரிக்காவில் அவ்வப்போது பரவும் இந்த தொற்று 2022இல் தான் உலகின் மற்ற நாடுகளிலும் பரவத் துவங்கியது. அதன்பிறகே உலக நாடுகளின் கவனம் பெற்று, பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்தாண்டில் மட்டும் காங்கோவில் சுமார் 18 ஆயிரம் பேருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டதாகவும், அதில் 615 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றம் அடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி விஞ்ஞானிகள் தெரிவிப்பதாவது: “குரங்கம்மை வைரஸ், பெரியம்மை தொற்றில் இருந்து உருவாகியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னதாக பெரியம்மை தொற்று பரவியபோது, தடுப்பூசி செலுத்தப்பட்டு படிப்படியாக தொற்று முடிவுக்கு வந்தது. அதன்பிறகு பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது குரங்கம்மை தொற்றாக உருவெடுத்துள்ளது. குரங்கம்மையை பற்றி ஆராய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
அதன் திரிபு அதிவேகமாக உருமாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் எம் பொக்ஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு திறன் கொண்டவர்களை எளிதில் தாக்குவதுடன், உயிரிழக்கும் அபாயத்தையும் உருவாக்குகிறது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.S
53 minute ago
57 minute ago
1 hours ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
57 minute ago
1 hours ago
10 Nov 2025