2025 மே 19, திங்கட்கிழமை

குரங்கம்மை குழந்தைகளை தாக்கும் அபாயம்

Freelancer   / 2022 ஜூலை 24 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குரங்கம்மையால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல் புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் குரங்கும்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குரங்கும்மை காய்ச்சலால் ஆபிரிக்க பிராந்தியத்தில் இதுவரை 05 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், ஏனைய நாடுகளில் இருந்து உயிரிழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கீடுகளின்படி இந்த நோயின் இறப்பு வீதம் 3 முதல் 6 வீதம் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X