Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 94 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபல ஹொலிவூட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது.
இந்நிகழ்வின் போது தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ்ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடாபிங்கெட்டின் தலை முடியை கிண்டல் செய்ததால், கோபமடைந்த வில் ஸ்மித் மேடைக்குச் சென்று கிறிஸ் கன்னத்தில் தாக்கினார். இச்சம்பவம் உலக அளவில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அது பற்றி கிறிஸ் ராக் கிண்டல் செய்து தவறு எனவும் வில் ஸ்மித் செய்தது சரி எனவும் சிலர் வாதிட்டுள்ளனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து வில் ஸ்மித் ஒஸ்கார் அகடமி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
மேலும் ஒஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு வில் ஸ்மித்ருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்தும் ஒஸ்கார் அகாடமி அமைப்பு உத்தரவிட்டிருந்தது. .
இருந்தபோதிலும் இவ் விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் எவ் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது செயலுக்காக கிறிஸ்ராக்கிடம் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பு வருகின்றனர்.
ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக வில் ஸ்மித் தனது youtube பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் கிறிஸ் ராக்கை தான் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்ததாகவும் ஆனால் இது பற்றி தற்போது பேச தயாராக இல்லை என கிறிஸ் ராக் தரப்பில் பதில் அளித்ததாகவும் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல எனவும், இதற்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
12 minute ago
49 minute ago
58 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago
58 minute ago
59 minute ago