Janu / 2024 ஜூன் 12 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த 21-ந் திகதி விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 211 பயணிகள் உள்பட 230 பேர் பயணம் செய்தனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் நடுவானில் குலுங்கியது. இதனையடுத்து அந்த விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
எனினும், இந்த சம்பவத்தில் ஒரு பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்பணமாக சுமார் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேபோல் மற்ற பயணிகளுக்கு முழு கட்டண தொகையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

6 minute ago
15 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
34 minute ago