Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உளவு பார்த்ததாக பாகிஸ்தானில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் யாதவ்வை, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகர் கெளரவ் அஹ்லுவாலியா இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இன்று (02) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அந்தவகையில், தூதரக உதவியை வழங்குமாறு சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டதன் பிற்பாடு, குல்பூஷன் யாதவ்வை முதன்முறையாக இந்திய அதிகாரியொருவர் நேற்றுச் சந்தித்துள்ளார்.
தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தம், சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தான் சட்டங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கு குல்பூஷன் யாதவ்வை இன்று சந்திக்கும் தூதரக வாய்ப்பு வழங்கப்படும் என நேற்று பாகிஸ்தானின் வெளிநாட்டலுவலகம் இன்று டுவீட் செய்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பின்படி சுதந்திரமான, நியாயமான, கருத்துமிக்க, ஆக்கபூர்வமானதாக சந்திப்பு அமையும் வண்ணம் சரியான சூழ்நிலை இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்யும் எனத் தாங்கள் நம்புவதாக இந்திய அரசாங்கத் தகவல் மூலங்கள் சந்திபுக்கு முன்னதாக நேற்றுக் காலையில் தெரிவித்திருந்தன.
பாகிஸ்தானிய இராணுவ நீதிமன்றமொன்றால் குல்பூஷன் யாதவ்வுக்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த விடயத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்தியா கொண்டு சென்றிருந்த நிலையில், தீர்ப்பை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யும் வரைக்கும் மரண தண்டனைத் தீர்ப்பானது இடைநிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஈரானில் வர்த்தகமொன்றை நடத்திக் கொண்டிருந்த குல்பூஷன் யாதவ், அங்கிருந்து கடத்தப்பட்டு உளவு பார்த்ததாக பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago