2025 நவம்பர் 05, புதன்கிழமை

கென்னீத் சூறாவளி; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்தது

Editorial   / 2019 மே 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்னீத் சூறாவளி கடந்த வாரம் தாக்கியதைத் தொடர்ந்து, மோசமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்லச் சிரமப்படுகின்ற நிலையில், வட மொஸாம்பிக்கியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஐவரே கொல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது திருத்தப்பட்டு, 38 பேர் கொல்லப்பட்டதாக மொஸாம்பிக்கின் தேசிய இடர் முகாமைத்துவ நிறுவகமே நேற்று முன்தினம் அறிவித்திருந்ததுடன், 35,000 வீடுகள் சேதமடைந்தோ அல்லது அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துல்ளது.

மொஸாம்பிக்கின் வட கபோ டெல்கடோ மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை தரையிறங்கியிருந்தநிலையில், பலத்த மழை ஏற்பட்டிருந்ததுடன், மணிக்கு 200 கிலோ மீற்றருக்கும் அதிகமான பலத்த காற்றும் வீசியிருந்தது. அந்தவகையில், தேசிய இடர் முகாமைத்துவ நிறுவகத்தின் மதிப்பீட்டின்படி இதுவரையில் 160,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொஸாம்பிக்கின் கரைகளைத் தாக்கும் முன்னர், கொம்றோஸைத் தாக்கியிருந்த கென்னீத் சூறாவளி நான்கு பேரைக் கொன்றதாக மனிதாபிமான விவகாரங்கணை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலத்தின் இற்றைப்படுத்தலில் இருந்து தெரியவந்துள்ளது.

மனிதாபிமான விவகாரங்கணை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலத்தின்படி, ஆபிரிக்காவைத் தாக்கிய பலமான சூறாவளி கென்னீத் என்ற நிலையில், எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X