Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
துனீஷியா ஜனாதிபதி தேர்தலில் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் கடந்த 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த ஜனாதிபதி தேர்தலில் வெறும் 28.8 சதவித வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 90.69 சதவித வாக்குகளை கையிஸ் சையத் பெற்றுள்ளார்.
அதன்படி, துனீஷியா அதிபர் தேர்தலில் அதிபராக கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, கையிஸ் சையத் இரண்டாவது முறையாக துனீஷியா நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .