Editorial / 2020 மார்ச் 30 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் பரவி வரும் கொரோனா கிருமித்தொற்றுக்கு, ஏறக்குறைய 200ஆயிரம் பேராவது பலியாகக்கூடும் என்று அந்நாட்டு தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபௌசி, மில்லியன் கணக்கானோர் கிருமித்தொற்றால் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்றார்.
வேகமாக பரவி வரும் கொரோனா கிருமிக்கு எந்த மாநிலமும் எந்த நகரமும் தப்பாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்டு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூ யார்க், நியூ ஜர்சி ஆகிய மாநிலங்களில் உள்ளவர்கள், இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும்படி டாக்டர் ஃபௌசி அறிவுறுத்தினார்.
5 minute ago
9 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
14 minute ago