2025 நவம்பர் 05, புதன்கிழமை

கொரோனா வைரஸால் உலக நாடுகள் அச்சம்

Editorial   / 2020 ஜனவரி 25 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரையில் 14 பேர் பலியாகி உள்ளதோடு, 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் அதிகமானோர் 80 வயதை தாண்டியவர்கள் என சீன அரசு அறிவித்துள்ளது.

ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் இந்த வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சில நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக நாடுகள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X