Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2024 மே 30 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய 2 பகுதிகளில் கோடை வெயிலின் உக்கிரத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டது.
சென்னை கிண்டி அருகே ஈக்காட்டுதாங்கலில் ஜான்பால் என்பவரின் பணிமனையின் மதில்சுவரை ஒட்டி ஏராளமான மரக்கழிவுகள் உள்பட பல்வேறு குப்பைக் கழிவுகள் தேங்கி கிடந்தன. இதன் அருகே ஒரு மின்சார டிரான்ஸ்பர்மரும் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்ததில், மின்சார டிரான்ஸ்பர்மர் திடீரென வெடித்தது. அதிலிருந்து வெளியான தீப்பொறிகள், அங்குள்ள குப்பைக் கழிவுகளில் விழுந்ததால் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும், அங்கு நின்றிருந்த 2 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து தகவலறிந்ததும் கிண்டி காவல்நிலைய ஆய்வாளர் பிரபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அங்கு குப்பைக் கழிவுகளில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் அங்கு அதிகளவில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து கிண்டி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், மீனம்பாக்கம் இரயில் நிலையம் அருகே ஏராளமான முட்புதர் காடுகள் உள்ளன. கோடை வெயிலின் உக்கிரத்தில், இங்குள்ள மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து கிடக்கின்றன. இந்நிலையில், நேற்று மாலை வெயிலின் உக்கிரத்தினால் முட்புதர் காடுகள் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கின. மேலும், சுற்றுப்புற பகுதிகளிலும் தீ பரவும் அபாயநிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் மீனம்பாக்கம் பொலிஸார் மற்றும் தாம்பரம், தி.நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அங்கு பரவியிருந்த தீயை சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி அணைத்தனர். இதனால் அங்கு பெருமளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மீனம்பாக்கம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட 2 பகுதிகளில் பரபரப்பு நிலவியது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago