Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தெய்வபட்ன பிரிவின் கட்சுலுரு கிராமத்துக்கு அருகே கோதாவரி ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை படகு விபத்து இரண்டு நாள்களின் பின்னர் ஆந்திரப் பிரதேச தேடுதல் மற்று மீட்பு அணிகள், தேசிய இடர் பதிலளிப்பு படைகளால் மேலும் 10 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், இன்று (17) நண்பகல் வரையில், பல அணிகளால் மீட்கப்பட்டிருந்த கைக்குழந்தையொன்றினது உட்பட மொத்தமாக 19 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய இடர் பதிலளிப்பு படைகளின் இரண்டாம் நிலைத் தளபதி சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
எட்டு உடல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், கோதாவரி ஆற்றானது நேற்று முன்தினம் தொடர்ந்தும் வெள்ளமெடுத்த நிலையில் தேடுதல் அணிகளால் நேற்று ஒரு உடலை மட்டுமே மீட்க முடிந்திருந்தது.
அந்தவகையில், நேற்று முன்தினமிரவுக்கும், நேற்றுக் காலைக்குமிடையில் கோதாவரி ஆற்றில் சில உடல்கள் மிதந்தபடி கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. சடலங்களை அடையாளங் காண அதிகாரிகள் முயல்கின்றனர்.
200க்கும் மேற்பட்ட நபர்களால் தேடுதல் மேற்கொள்ளப்படுவதாக தெய்வப்ட்னம் துணைப் பொறுப்பதிகாரி துர்கா பிரசாத் கூறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த தனியார் சுற்றுலாப் பயணிகள் படகு மூழ்கியதைத் தொடர்ந்து இன்னும் 25க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கோதாவரி ஆற்றின் 315 அடி ஆழத்தில் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் அதில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். கடற்படை மற்றும் ஏனைய நிபுணத்துவ அணிகளுடன் படகை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
18 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
04 Nov 2025