Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திராவில், பழமையான சிவன் கோவிலுக்கு அருகில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில், திடீர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மூவரும், நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலேயே, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தின் தானக்கல்லு மண்டலத்திலுள்ள கொர்ட்டிகோட்டா கிராமத்தின் வனப்பகுதியிலேயே, இந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. மிக பழமையான அந்தக் கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திங்கட்கிழமை பிற்பகல், சிவன் கோவிலுக்கு அருகில், இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், மூவரது சடலங்களையும் மீட்டு, அனந்தபுரம் அரசாங்க வைத்தியசாலைக்கு, பிரதேச பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, சிவன் கோவிலில் உள்ள லிங்கத்துக்கு, மனித இரத்தத்தால் அபிஷேகம் நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழமையான கொர்ட்டிகோட்டா சிவன் கோவிலில், புதையல் இருப்பதாகக் கூறப்படுகிறது. புதையலை எடுப்பதற்காக மூவரையும் நரபலி கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்த மூன்று பேரும், அதே பகுதியை சேர்ந்த ஹனுமம்மா, சத்யலட்சுமி, சிவராம் ரெட்டி என்று தெரியவந்துள்ளது. கோவில் கட்டுமானப் பணிகளில் இருந்த அவர்கள், வேலை முடிந்த பின் உறங்கிய பின்னரே, இந்தக் கொலை நடந்தள்ளதாக தெரியவந்துள்ளது.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago