Freelancer / 2024 நவம்பர் 04 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடா - பிராம்டன் நகரில் அமைந்துள்ள இந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
“மதத் தளத்தில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒவ்வொரு கனேடியருக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago