2025 மே 14, புதன்கிழமை

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்

Editorial   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலை அடுத்த காசாவை ஒட்டிய கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியருகே கடந்த வார இறுதியில், சனிக்கிழமையன்று (07)  இசை திருவிழா ஒன்று நடந்துள்ளது. நேச்சர் பார்ட்டி என்ற  பெயரிலான இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். ஆடிப்பாடி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அடுத்து நடக்க போகும் பயங்கர நிகழ்வை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.


 இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளால் தாக்கியது. அப்படி அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இதில்  சிக்கி திருவிழாவில் பங்கேற்றவர்களில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

லீ சசி என்ற அந்த பெண் மற்றும் 35 பேர்  புகலிடம் ஒன்றில் ஓடி சென்று பதுங்கி உள்ளனர்.   அவர்களை தேடி வந்த ஹமாஸ் குழுவினர், தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சுட்டு தள்ளினர். பின்னர் கையெறி குண்டுகளையும் வீசி, தாக்கியுள்ளனர். இதில், பலரும் ஒருவர் மேல் ஒருவர் என அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.

எனினும், இதில் சசி பாதுகாப்பாக தப்பியுள்ளார். அவர்களில் 10 பேர் மட்டுமே உயிருடன் வெளியே வந்துள்ளனர். உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து  அனைவரும் உயிர் தப்பினோம் என அவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

இந்த பயங்கர தகவலை சசி, தன்னுடைய தோழியான நடாஷா ரகேல் கிர்த்சக் கட்மேனிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். 7 மணிநேரம் பதுங்கியிருந்தோம். நான் ஜோக் எதுவும் கூறவில்லை என தெரிவித்து, புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் அதற்கு சான்றாக வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், பலர் உயிரிழந்த நிலை கிடக்க கூடிய காட்சி அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .