Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, எதிர்வரும் 2020ஆம் ஆண்டில், சூரியனின் வெளிப்பரப்பை ஆராய, ஆதித்யா விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ, ஆதித்யா - எல்.1 என்ற செயற்கைக் கோளை, 2020ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்துக்குள், விண்ணில் ஏவுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 15 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சூரியனின் வெளிப்பரப்பை ஆராய்வதற்காகவே, இந்த விண்கலம் அனுப்பப்படுவதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
இந்த ஆதித்யா விண்கலத்தின் மூலம், பூமியின் சுற்றுச்சூழல் மாறுபாட்டை தெரிந்துக்கொள்ள முடியும் என்றும் மேலும் சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களைப் பற்றிய ஆராய்ச்சி பணிகளிலும் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே போன்று, வெள்ளிக் கிரகத்தை ஆராயவும் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், விண்கலமொன்றை அனுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago