2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சீனாவில் நில அதிர்வு

Freelancer   / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 
 
சீனாவின் கன்சு மாகாணத்தின் லாங்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை, 5.6 மெக்னிடியூட் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. 
 
இதில், 17 வீடுகள் இடிந்து வீழ்ந்தன. 3,500 இற்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன. லாங்சி மற்றும் ஜாங்சியன் மாவட்டங்களில் சுமார் 7,800 பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். 
 
இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X