2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆசியக் கிண்ணம்: இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 147 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 28 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கு 147 ஓட்டங்களை இந்தியா பெற வேண்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ், பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹான், பக்கர் ஸமன் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. 57 (38) ஓட்டங்களுடன் வருண் சக்கரவர்த்தியிடம் பர்ஹான் வீழ்ந்ததன் பின்னர் 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் மேலும் 33 ஓட்டங்களைப் பெறுவதற்குள் குல்தீப் யாதவ் (4), அக்ஸர் பட்டேல் (2), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரிட் பும்ராவிடம் (2) 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களையே பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X