Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீஜிங்:
சீனாவில் இயற்கைப் பேரழிவுகளால் இவ்வருட முக்கால்வாசி காலப்பகுதியில் குறைந்தபட்சம் 792 பேர் இறந்துபோய் அல்லது காணாமல்போய் உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கூடுதலாக மொத்தம் 94.94 மில்லியன் மக்கள் உறைபனி காலநிலை, பனிப்புயல், மணற்புயல், காட்டுத் தீ, புல்வெளி தீ மற்றும் கடல் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவை தவிர குறைந்தபட்சம் 1.75 மில்லியன் வீடுகள் சேதமடைந்துள்ளதோடு சுமார் 10,583 ஹெக்டயர் பயிர்ச்செய்கைகள் நாசமாகியுள்ளன.
இயற்கை பேரழிவுகள் நேரடியாக மொத்தம் யு.எஸ்.டி. 44.37 பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சீன அதிகாரிகளை மேற்கோள் காட்டி குளோபல் டைம்ஸ்; ((Global Times)) செய்தி வெளியிட்டுள்ளது.
சீன அதிகாரிகளின் கூற்றுப்படி இவ்வாண்டின் முதல் அரைவாசி காலப்பகுதியில் குறைந்தபட்சம் 156 பேர் இறந்துபோய்விட்டதாக அல்லது காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் மத்திய சீனாவின் ஹெனான் மற்றும் ஹூபேய் மாகாணங்களில் புயல்கள் மற்றும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டன. மத்திய சீனாவில் வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 21 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய பேரழிவுகளில் தவறான நிர்வாகம்பற்றி பீஜிங் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதற்கிடையே வட சீனாவின் ஷான்க்ஸி மாகாணம் கடந்த சில நாட்களாக கடுமையான வெள்ளப்பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
45 minute ago
1 hours ago