2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

சீனாவில் 4 அமெரிக்கர்கள் மீது கத்திக்குத்து

Editorial   / 2024 ஜூன் 11 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் நான்கு அமெரிக்கர்கள் கத்திக்குத்திற்கு இலக்காகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சீனாவின் பல்கலைகழகமொன்றில் பணியாற்றிய நான்கு அமெரிக்கர்கள் ஜிலின் மாகாணத்தின் பூங்காவிற்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயோவா கார்னல் கல்லூரியில் பணியாற்றிய அமெரிக்கர்களே கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் தனது சகோதரரும் ஒருவர் என அயோவாவின் சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் அடம்ஜப்னெர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜைகள் ஆலயமொன்றிற்கு சென்றவேளை நபர் ஒருவர் கத்தியால் தாக்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .