S.Renuka / 2026 மார்ச் 02 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் பரபரப்பு தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது தாக்குதல் நடத்திதியமை தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று கூறியதாவது,
ஈரான் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். முதல் கட்டத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் தாக்குதல் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
மேலும், சனிக்கிழமை (28) மாலை காமேனி முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனால், நாங்கள் தாக்குதல் நடத்த போவது குறித்து தகவல் கசிந்து அவர் தப்பிவிட்டால் நிலைமை மோசமாகி விடும்.
இதற்கிடையில், சனிக்கிழமை (28) மாலை நடக்க இருந்த ஆலோசனை கூட்டம் காலையிலேயே நடைபெறவுள்ளதாக இஸ்ரேல் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்து தகவல் தெரிவித்தனர். அதனால் வேறு வழியின்றி உடனடியாகத் தாக்குதலை தொடங்கி விட்டோம்.
இவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. மேலும் காமேனியின் மகள், மருமகள், பேத்தியும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago