Freelancer / 2026 பெப்ரவரி 12 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஐ.எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இணையதளங்களில் போலி தகவல்களை பரப்பினால், ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் மற்றும் போலியான மின்னணு தரவுகளை பதிவிட்டால், சட்டவிரோதமாக கருதப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க்கின், 'எக்ஸ்' சமூக வலைதளத்தை உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜி.பி.டி., போல, 'கிராக்' என்ற ஏ.ஐ. தொழில்நுட்பத்தை, எக்ஸ் வலைதளம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்தி, ஆபாச படங்கள் வெளியிடுவது.
போலி செய்திகளை உருவாக்குவது என, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், பயனாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
எனவே, கிராக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்க்க, எக்ஸ் நிறுவனம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழலில், சமூக வலைதளங்களில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி தகவல்களை பரப்பினாலோ, ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டாலோ சட்டவிரோதமாக கருதப்படும் என, மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. (a)
6 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
2 hours ago