2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

சுற்றுலாப் பயணியின் ஆண் உறுப்பைத் தீண்டிய பாம்பு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 08 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாப்பிரிக்காவிலுள்ள  வனப்பகுதியைப் பார்வையிடச் சென்ற  சுற்றுலாப் பயணி ஒருவரின் ஆண் உறுப்பை நாகப் பாம்பு ஒன்று தீண்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த  47 வயதான குறித்த நபர்  அப்பகுதியில் இருந்த கழிப்பறையைப் பயன்படுத்திய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுமார் மூன்று மணிநேரம் கழித்தே அந்நபர்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்” இதன் போது அவரது அந்தரங்க உறுப்புகள் மற்றும் விதைப்பை முற்றிலும் வீங்கி கரு ஊதா நிறமாக மாறியிருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரின் உயிரைக் காப்பாற்ற, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷ பாம்புகளின் தாயகமாக தென்னாப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள்  விளங்குகின்றன என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X