2025 மே 03, சனிக்கிழமை

சிலி, ஆர்ஜன்டீனாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Freelancer   / 2025 மே 02 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் இன்று (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X