Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 09 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவில் மீண்டும் அடைமழை பெய்யும் என்று, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவூதி அரேபியாவில், ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழை பதிவாகும். சராசரியாக ஆண்டுக்கு 10 மில்லிமீற்றர் மழை பெய்வதே பெரிய விஷயம் ஆகும். தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரண்டு நாட்களில் சவுதியில் 4.9 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. அதேபோல் ஜெட்டா நகரில் 3.8 மில்லிமீற்றர் மழை பதிவாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பெய்த அடைமழையால் வீதிகள் அனைத்தும் ஆறுகள் போல் காட்சி அளித்தன. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். இந்த அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஓமனில் 21 பேரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவில் மீண்டும் அடைமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சவூதி தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
இந்த வாரம் முழுவதும் மிதமானது முதல் இடியுடன் கூடிய அடைமழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் தூசி நிறைந்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அவற்றில் கிழக்கு நகரங்களான அல் அஹ்ஸா, ஜுபைல், அல் கோபார், தம்மாம் மற்றும் கதீப் ஆகியவை அடங்கும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடைமழை காரணமாக, சவூதி அரேபியாவில் பொது இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ரியாத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இணையவழி வகுப்புகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடைமழையால் துபாய் விமான நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏராளமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புனித நகரமான மக்கா மற்றும் ஜெட்டா நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
மழையோடு அவ்வப்போது பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. சவூதி அரேபியா முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருவதாக, உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
8 minute ago
15 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
23 minute ago