Editorial / 2019 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்படுவதற்கு முன்பு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் டெல்லியில் இன்று போராட்டம் நடக்கிறது.
திமுக எம்.பி., டி ஆர். பாலு தலைமையில் இந்த போராட்டம் நடப்பதுடன், இதில் பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நேற்று இரவு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் ப. சிதம்பரத்திடம் இன்றும் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இந்தப் போராட்டம் நடக்கிறது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.,யும், சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் டெல்லி செல்வதற்கு முன்பு ஊடகங்களுக்கு கூறினார்.
ஆதலால் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக கருதப்படுகிறது.
22 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
54 minute ago
1 hours ago