2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சிரிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்பு

Freelancer   / 2023 ஜூன் 07 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் கொரோனா தொற்று உச்ச கட்டத்தை எட்டி இலட்சக்கணக்கானோர் பலியான நிலையில் , மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்கள். கொரோனா பரவாமல் இருக்க கடைபிடித்த முக கவசம் அணியும் பழக்கமும் அதன் ஒரு காரணம் என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது .

 தொடர்ச்சியாக முக கவசம் அணிந்து அவர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். ஜப்பானிய அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடில் இருந்து முக கவசம் அணிவதற்கு கட்டாயம் இல்லை என்ற போதும், இன்றும் பலர் முக கவசம் அணிந்து தான் வெளியே செல்கிறார்கள்.

இந்நிலையில், டோக்கியோவில் உள்ள கலை கல்வி நிறுவனம் ஒன்று சிரிக்க மறந்த ஜப்பானிய மக்களுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை எடுத்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .