Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாமிய ஆயுததாரிகளால் கட்டுப்படுத்தப்படும் வடமேற்கு சிரியாவுக்குள் துருக்கி இராணுவத் தொடரணியொன்று நேற்று நுழைந்தபோதும், சிரியாவுக்கும், துருக்கிக்குமிடையிலான பதற்றங்கள் அதிகரிக்கையில் அதன் பாதையானது முன்னேறுகின்ற சிரிய அரசாங்கப் படைகளால் தடைப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாபற்றதாக கிறிஸ்தவ நிறுவனங்கள் இருப்பதாக பெற்றோர் கருதுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து திரும்பப் பெறப்பட்டது.
வழக்குக்கும், கருத்துக்கும் பொருத்தமில்லை என முறையீடு செய்யப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் தனது கருத்தை திரும்பப் பெற்றார். மேலும், கட்டாய மதமாற்றத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் ஈடுபடுவதாகவும் கூறிய கருத்தையும் அவர் திரும்பப் பெற்றார்.
கல்லூரி மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்கும்போதே, மேற்கண்டவாறு அரசாங்கத்துக்கு பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயிலும் விலங்கியல்துறை மாணவ, மாணவிகள் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றன. சுற்றுலாவுக்குப் பின்னர் சென்னை திரும்பிய கல்லூரி மாணவிகள், சுற்றுவிலாவின்போது உடன்வந்த இரண்டு பேராசிரியர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி அதிபரிடம் புகாரளித்தனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின்படி பணிநீக்கம் செய்வது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் பேராசிரியர்களுக்கு அழைப்பாணை அனுப்பியது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago