Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம், இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பூட்டான் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திம்புவிலுள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பூட்டானுக்கு யார் வந்தாலும், அதன் இயற்கை அழகு, ரம்மியம், மக்களின் எளிகை ஆகியன அனைவரையும் கவரும் என்றும் பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய பிணைப்பு இருப்பது இயற்கையானது என்றும் கூறினார்.
“நாம் புவியியல் ரீதியாக மட்டுமல்ல வரலாறு, கலசாரம், ஆன்மிக பண்பாடு ஆகியன இரு நாடுகள், நாட்டு மக்களிடையே தனித்துவம் வாய்ந்த பிணைப்பை ஏற்படுத்தி உள்ளது” என்றும் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம், இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட அவர், இத்திட்டம் 500 மில்லியன் இந்தியர்களுக்கும் சுகாதார காப்பீட்டை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பூட்டானின் சிறிய ரக செயற்கைகோளை ஏவுவதற்காக பூட்டானிய விஞ்ஞானிகள் இந்தியா வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் உங்களில் பலர் விஞ்ஞானிகளாகவும் பொறியியலாளர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் விரைவில் வருவீர்கள் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
2022இல், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம், இந்தியாவிடம் உள்ளது என்று தெரிவித்த அவர், சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது, நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானது என்றும் கூறினார்.
26 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago