2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி மீது பாலியல் பலாத்காரம்;பிரபல கிரிக்கெட் வீரர் கைது

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 06 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாள கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த சந்தீப் லாமிச்சானே(Sandeep Lamichhane) சிறுமியொருவரைப்   பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தீப் லமிச்சனே இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர், ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் 17 வயதுடைய சிறுமியொருவரைப்  பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இன்றைய தினம் (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இது குறித்து அச்சிறுமி தெரிவித்த புகாரில், ”ஒரு நபரின் மூலமாக சந்தீப்பை சந்திக்க அனுமதி கிடைத்தது. அதன்பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று காத்மாண்டு ஹோட்டலுக்கு  என்னை அழைத்து, அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தார் ”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாரா ? என்பது குறித்து  மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சந்தீப் லாமிச்சானேவைக்  கைது செய்த பொலிஸார்  இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது குறித்து சந்தீப் லமிச்சனே  “என் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்காரப்  புகார் மிகுந்த மன வேதனையளிக்கின்றது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன்”எனத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X