2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சிறுவனின் உயிரைப் பறித்த 115 அடிக் குழாய்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 06 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வியட்நாமில், டோங் தெப் மாகாணத்தில் கடந்த 31 ஆம் திகதி ,சுமார் 115 அடி ஆழமும், 25 சென்டி மீற்றர்  அகலமும்  கொண்ட கொன்கிரீட் குழாய்க்குள் 10 வயதுச் சிறுவனொருவன் விழுந்துள்ளான்.

இதனையடுத்து குறித்த சிறுவனை மீட்க அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

 எனினும் அவை அனைத்தும் தோல்வியிலே முடிவடைந்துள்ளது.

 இந்நிலையில் பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர்   நேற்று முன்தினம்(04) குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவமானது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .