2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிறுவனைக் கட்டாயப்படுத்தி உடலுறவு; குழந்தை பெற்றதால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 09 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

31 வயதான பெண்ணொருவர்,13 வயதான  சிறுவனொருவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டு, குழந்தையொன்றைப் பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலடராடோ மாகாணத்தில் வசித்து வரும் ‘ஆண்ட்ரியா செர்ரானோ‘ என்ற பெண்ணே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் கடந்தாண்டு அதே பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவனுடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு நாள் அச்சிறுவன்  தனியாக இருக்கும் போது அவனைக் கட்டாயப்படுத்திப்  பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதன் விளைவாக அப் பெண்  கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் கொலராடோ பொலிஸார் அப் பெண்ணைக்  கைது செய்து விசாரித்தனர்.

ஆண்ட்ரியாவும் தனது தரப்பில் வழக்கறிஞரை வைத்து இந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அச்சிறுவனுடான உறவின் மூலம் கர்ப்பம் தரித்திருந்த ஆண்ட்ரியாவுக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

இக்குற்றத்திற்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .