Ilango Bharathy / 2022 ஏப்ரல் 07 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் ‘சிறுவர் ஆபாச படங்களின் விநியோகமும் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டுப் பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் 108.8 % சிறுவர்களின் ஆபாச பட விநியோகம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் வருடாந்திர குற்ற புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜேர்மனியின் உட்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் ” பயங்கரமாக அதிகரித்திருக்கும் சிறுவர் பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தனக்கு ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜேர்மனியில் கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் குறிப்பாக வன்முறை, குற்றங்கள் 6.8 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
09 May 2026
09 May 2026