2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிலிண்டர் வெடித்து 31 பேர் பலி

Freelancer   / 2023 ஜூன் 22 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 31 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொழுதுபோக்கு மற்றும் உணவகங்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிராகன் படகு திருவிழா விடுமுறைக்கு முன்னதாக, நேற்று மாலையில், நிங்சியா ஹுய் தன்னாட்சி பிராந்தியத்தில், தலைநகர் யின்சுவானில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .