Freelancer / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி சவால்களை சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்து வரும் பாகிஸ்தான், நவீன சாதனங்களில் தனது தன்னிறைவை அதிகரிக்க நாட்டில் குறைகடத்தி (செமிகண்டக்டர்) வலயத்தை உருவாக்க சீனாவின் உதவியை நாடியுள்ளது.
மேற்கத்தேய நாடுகள் பாகிஸ்தானை புறக்கணித்து வரும்நிலையில் இம்ரான் கானின் சீனப் பயணம், இஸ்லாமாபாத்தின் நிதி பீஜிங்கை சார்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது
பாகிஸ்தானின் பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளதால், அந்நிய நேரடி முதலீட்டை எல்லா வழிகளிலும் அதிகரிக்க இம்ரான் கான் அரசாங்கம், முனைவதாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.
"சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு வந்து பாகிஸ்தானை குறைக்கடத்திகள் உற்பத்தியின் மையமாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று சைனா எகொனாமிக்நெட் உடனான தனது பேட்டியில் ஃபவாத் கூறியதாக நியூ இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
சீனாவின் அந்நியச் செலாவணிக்கான அரச நிர்வாகத்தில், 3 பில்லியன் டொலர் மதிப்புடைய மற்றொரு கடனுக்கு அனுமதி வழங்க சீனாவைக் கோருவதையும் இம்ரான் கான் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு தேவையான நிதியை சீனா வழங்கியதா என்பது குறித்து அவரது சீன பயணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இரு அரசாங்கங்களும் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .