2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்

Freelancer   / 2023 ஜூலை 27 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சராக கடந்த மாா்ச் 12 ஆம் திகதி   பொறுப்பேற்ற Qin Gang, கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவா் என்று கூறப்படுகிறது. 

இதனால், அவருக்கும் அதிபா் Xi Jinping-க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாகவே முக்கிய நிகழ்ச்சிகளில் Qin Gang  ஓரம் கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வெளிவிவகார அமைச்சா் பதவியில் இருந்து அவா் விலக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக  ஏற்கெனவே வெளிவிவகார அமைச்சராக இருந்த Wang Yi நியமிக்கப்படுவதாகவும் செவ்வாய்க்கிழமை (25) அறிவிக்கப்பட்டது.

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வெளிவிவகார அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) உள்ளிட்டோா் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டு, நாடு திரும்பியுள்ள நிலையில்,  Qin Gang பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .