Editorial / 2025 நவம்பர் 21 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் ஜியான்சு மாகாணத்தில் பென்குவாங் மலை உள்ளது. இங்கு சீனாவின் பாரம்பரிய கோயில்கள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள வென்சாங் பெவிலியனில் உள்ள கோயில் கடந்த 12-ம் திகதி புதன்கிழமை தீயில் எரிந்து சாம்பலானது.
இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்த கோயில் கடந்த 2009-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
சீன இலக்கியம், கலாச்சாரம், பாரம்பரியம் கொண்டு அந்தக் கோயில் கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அப்போது கோயிலுக்குள் மெழுகுவர்த்தி, ஊதுபத்திகளை கொளுத்தி வைப்பது வழக்கம். அதுபோல் சுற்றுலா பயணிகள் கடந்த 12-ம் தேதி மெழுகுவர்த்தி, ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளனர். எளிதில் தீப்பற்றும் இடத்தில் அவற்றை ஏற்றி வைத்ததால் கோயில் தீப்பிடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
27 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago