2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீன ஜனாதிபதிக்கு எதிராக பாலத்தில் போராடிய மர்ம மனிதர்

Editorial   / 2022 ஒக்டோபர் 25 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்கின் ஹைடியன் பல்கலைக்கழக மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் ஒரு மனிதர் கார் டயர்கள், அட்டை பெட்டியுடன் ஏறினார்.

ஆரஞ்சு வண்ணத்திலான தொழிலாளர்களுக்கான உடை, கடினமான மஞ்சள் நிறத்திலான தொப்பி ஆகியவற்றுடன், பார்ப்பதற்கு ஒரு கட்டுமான தொழிலாளர் போல எளிதாக அவர் ஏறி சென்றார்.

அதனைத் தொடர்ந்து அவர், சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட முழக்க வார்த்தைகள் அடங்கிய இரண்டு வெள்ளை நிற பேனர்களை திடீரென விரித்தார். தான் கொண்டு வந்த டயர்களை தீ வைத்து எரித்தார். இதனால் அவரை சுற்றி இறகுகள் போல கரும்புகை சூழ்ந்தது. ஒரு சிறிய ஒலிப்பெருக்கியை எடுத்து, திரும்பத் திரும்ப முழக்கங்களை எழுப்பினார்.

"பள்ளி, பணியிடம், ஆகியவற்றில் வேலை நிறுத்தம் செய்யுங்கள். சர்வாதிகாரி மற்றும் தேசதுரோகி ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை அகற்ற வேண்டும். நாம் உணவு உண்ண வேண்டும், எங்களுக்கு சுதந்திரம் தேவை. நாங்கள் வாக்களிக்க வேண்டும்," என்று முழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X