Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திரத் தின விழாவைச் சீர்குலைக்க, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் சில பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து காஷ்மிர் பிராந்தியத்தில் 10 ஆயிரம் இராணுவ வீரர்களை குவிக்க மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம், எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இதைச் சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தானைத் தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ- தொய்பா, ஜெய்பு-இ-முகமது ஆகிய பயங்கரவாதக் குழுக்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தக் குழுக்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். வழி நடத்துவதாகவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரதின விழா கொண்டாடும் சமயத்தில் அல்லது அதற்கு முன்பு காஷ்மிர், முக்கிய நகரங்களில் தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றிய தகவல்களை இந்திய உளவுத் துறை கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சுக்கு அறிவித்தது.
குறிப்பாக காஷ்மிரில் முக்கிய இராணுவ முகாமை கைப்பற்ற உள்ளூர் மக்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் முயற்சி செய்யக்கூடும் என்ற இரகசிய தகவலும் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.
அத்தகைய சம்பவம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே காஷ்மீரில் கூடுதலாக 10 ஆயிரம் இராணுவ வீரர்களை மத்திய உள்துறை குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago